உடலை ஆரோக்கியமாக வைக்கும் ஃபிரிட்ஜ் சாலட்
ஃபிரிட்ஜ் சாலட் என்பது குளிர் சாதனப் பெட்டியில் சிறிது நேரம் வைத்து விட்டு சாப்பிட வேண்டிய சாலட் ஆகும்.
இந்த சாலட் வகைகளில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலட்டை காய்கறிகள் மட்டும் அன்றி பழங்கள் கொண்டும் சாப்பிடலாம்.
அத்தோடு இதை 3 நாட்கள் மட்டுமே குளிர் சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகின்றது.
அது மட்டும் அன்றி இதனை இரவு உணவாகவும் எடுத்து கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.
லெமனி அர்டிகோக் மற்றும் திணை சாலட்
இந்த சாலட் ஸ்பானிஷ் கொண்டைக்கடலை மற்றும் அரிசி கொண்டு செய்யப்படுகிறது.
இதில் எலுமிச்சை, திணை, வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் போன்ற பல பொருட்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.
இது ஒரு கோடை கால சாலட் வகையாகும். இது புத்துணர்ச்சி அளிக்க கூடியது. இதை குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாறலாம்.
இது புரோட்டீன் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது.
தேன், கடுகு மற்றும் ப்ராக்கோலி சாலட்
இதில் இனிப்பு தேன், ப்ராக்கோலி, சிவப்பு வெங்காயம், பாதாம் பருப்பு, உலர்ந்த க்ரான் பெர்ரி, பூண்டு போன்ற பல பொருட்கள் சேர்க்கப்படுகிறது.
இந்த சாலட் ஒரு மொறு மொறுப்பான சுவையை தரும். இந்த கோடை காலத்தில் சில நிமிடங்களில் தயார் செய்ய இந்த சாலட் சிறந்த தேர்வாக இருக்கும்.
இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது. இதயத்திற்கு நல்லது.
தக்காளி மொசரெல்லா பாஸ்தா சாலட்
இதில் பாஸ்தா, கீரை, தக்காளி மற்றும் மொசரெல்லா போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு செய்யப்படுகிறது.
இது இந்த கோடை க்கு சிறந்த உணவாக இருக்கும். இதையும் ஃபிரிட்ஜில் வைத்து குளிர்வித்து நீங்கள் சாப்பிடலாம்.
இதில் பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் சோடியம் போன்றவை காணப்படுகிறது. இது உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
குளிர் வேர்க்கடலை நூடுல்ஸ் சாலட்
இந்த குளிர் வேர்க்கடலை நூடுல்ஸ் சாலட் கோடை காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவாகும்.
இந்த சாலட் மொறு மொறுப்பான சுவையுடன் பிடித்த டிஷ்ஷாக இருக்கும்.
இதில் வேர்க்கடலை, பச்சை வெங்காயம், சிவப்பு முட்டைக்கோஸ் போன்ற பொருட்களை சேர்த்து செய்கின்றனர்.
இதை ஃபிரிட்ஜில் வைத்து பரிமாறலாம். இது சிறந்த புரோட்டீன் ஆதாரத்தை தருகிறது.