போதையில் பாடசாலை பேருந்தை செலுத்திய சாரதிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
திருகோணமலை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாடசாலைப் பேருந்து சாரதிக்கு இரண்டு மாத கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கந்தளாய் தலைமை நீதவான் நீதிமன்றம் கந்தளாய் தலைமை நீதவான் டி.பி.ஜி. சந்தரகேக, எல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதான குற்றவாளிக்கு, ஒரு வருட காலத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ததுடன், ரூ. 30,000 அபராதமும் விதித்தார்.
இந்த வாரம் பாடசாலை மாணவர்களை எல்லவிலிருந்து திருகோணமலைக்கு கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்றிச் சென்றபோது சாரதி குடிபோதையில் இருப்பது கண்டறியப்பட்டது.
தம்பலகாமத்தில் உள்ள பொலிஸ் நடமாடும் ரோந்துப் பிரிவினால் பேருந்தை ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது சாரதி குடிபோதையில் இருப்பது கண்டறியப்பட்டது பொலிஸார் அவரை சம்பவ இடத்திலேயே கைது செய்து, மாணவர்கள் தங்கள் சுற்றுலாவைத் தொடர மற்றொரு சாரதியை வழங்கினர்.