தினமும் ஒரே ஒரு கேரட் சாப்பிடுங்கள்; பின்பு நடக்கும் அதிசயம் பாருங்கள்!
கேரட் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகளை வழங்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வர உடலில் நிகழும் மாற்றங்களை கண்டு நீங்களே அதிசயப்படுவீர்கள்.
கேரட்டில் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. உடலில் அதிக அளவு கொழுப்பு உள்ளவர்கள் கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதோடு கேரட்டை வேக வைத்து சாப்பிடுவதை விட அதனை பச்சையாக கடித்து சாப்பிடுவது நம் உடலுக்கு பன்மடங்கு நன்மை பயக்கும். பச்சையாக சாப்பிடும் போது தான் அதிலுள்ள சத்துக்கள் குறையாமல் அனைத்தும் நமக்கு கிடைக்கும்.
இதன் மூலம் இதய நோய்கள் நம்மை தாக்காமல் பார்த்துக் கொள்ளலாம். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க தொடர்ந்து மூன்று வாரம் தினமும் ஒரு கப் அளவு கேரட் சாப்பிட்டு வாருங்கள். உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கேரட்டில் உள்ள நார்ச்சத்தே இதற்கு காரணமாக இருக்கிறது. கேரட்டை வேக வைக்கும்போது, அதன் தடினமான சுவர்களில் அடைப்பட்டு கிடக்கும் பீட்டா கரோட்டின் வெளி வந்துவிடும்.
எனவே, கேரட்டை சமைக்கும் போது அதனோடு சிறிதளவு வெண்ணெய் சேர்த்து சமைத்தால் அதன் முழு சத்தையும் நாம் பெறலாம்.

பீட்டா கரோட்டின் நம் உடலுக்குள் நுழைந்தவுடன் வைட்டமின் A சத்தாக மாறி, நம் கண் பார்வையை மேம்படுத்துகிறது. அதோடு பளபளப்பான சருமத்தையும் பெறலாம்.
வைட்டமின் A குறைபாடு மாலைக்கண் நோய் உள்ளிட்டவைக்கு வழிவகுக்கும். எனவே, அடிக்கடி நம் உணவில் கேரட் சேர்த்து வர இது போன்ற பாதிப்புக்கள் நம்மை நெருங்காது.