ஈஸியா உடல் எடையை குறைக்கனுமா ; இதை மட்டும் குடிங்க போதும்
நாம் நமது சமையலறையில் பயன்படுத்தும் மசாலாக்கள் நமது உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது. பல வித உடல்நல பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மசாலாக்களில் வெந்தயமும் மிக முக்கியமான ஒன்றாகும்.
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் மக்களை அதிக அளவில் படுத்தும் பிரச்சனையாக உள்ளது. உடல் எடையை குறைக்க, தொப்பை கொழுப்பை கரைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள்.
எடை இழப்பில் உதவும் வெந்தய நீர்
சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், பல எளிய இயற்கையான வழிகளில் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அவற்றில் வெந்தய நீரும் ஒன்றாகும்.
வெந்தய நீர் அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. உடல் பருமனை குறைத்து எடை இழப்பில் உதவ வெந்தய நீரை உட்கொள்ளலாம். வெந்தயத்தில் நார்ச்சத்து உள்ளது, இது பசியைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் வயிற்றுக்கு எப்போதும் நிரம்பிய உணர்வு கிடைக்கிறது. இதனால் தெவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
வெந்தய நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பைக் குறைக்கிறது. வெந்தய நிரை எப்படி உட்கொள்ள வேண்டும்? வெந்தய நீர் தயார் செய்ய, இரவில் ஒரு கப் தண்ணீரில் வெந்தயத்தை ஊறவைக்கவும். காலையில், இந்த தண்ணீரை லேசாக சுடவைக்கவும். சூடாக்கிய பிறகு, இந்த தண்ணீரை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றைக் கலந்து குடிக்கவும். இப்படி தினமும் குடிப்பது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும்
செரிமானம் சீராகும்: சிறந்த செரிமானத்திற்கு வெந்தய நீரைக் குடிப்பது நல்லது. இது சுத்தமான பாக்டீரியாவை ஊக்குவித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது மலச்சிக்கல், வாயுத்தொல்லை மற்றும் அஜீரணத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
கொழுப்பைக் குறைக்க உதவும்: வெந்தய நிரைக் குடிப்பது நரம்புகளில் படிந்துள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். இது கொழுப்பைக் குறைத்து இரத்த அழுத்தத்தை சிறப்பாக வைத்திருக்கும். மேலும் இதனால் இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
நீரிழிவு நோயில் நிவாரணம் : வெந்தய நீர் உயர் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் நன்மை பயக்கும். இதைக் குடிப்பது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது. இதனுடன், இது தோல் மற்றும் கூந்தலுக்கும் நல்லது.