மாவீரர் தின நினைவேந்தலுக்குத் தயாராகும் பல்கலைக்கழகம்
மாவீரர் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
நவம்பர் 27ஆம் திகதியான இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதையொட்டி, மாவீரர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களின் வரலாற்றிலும் சமூக நினைவிலும் முக்கியத்துவம் பெற்ற மாவீரர் தினத்தை முன்னிட்டு, பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாவீரர்களின் நினைவுகளை அடுத்த தலைமுறையினருக்கும் கடத்தும் நோக்கில் இந்த நினைவேந்தல் நிகழ்வு முக்கியத்துவம் பெறுகின்றது.




