கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளராக பீ.கலாமதி நியமனம்
கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக ஜ.கே.ஜீ.முத்துபண்டாவும், ஏ.எச்.எம்.அன்ஸார் வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும், பீ.கலாமதி பத்மராஜா முதலமைச்சின் செயலாளராகவும், ஜே.ஜே.முரளிதரன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்காவும், கிழக்கு மாகாண பேரவையின் செயலாளராக எம்.வை.சலீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு எம்.கோபாலரத்னம்
பிரதி பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் பயிற்சி) திருமதி ஆர்.யூ.ஜலீல்
பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) மன்சூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.