உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதியின் அறிவிப்பு
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் தாக்குதல்களுக்குப் பொறுப்பான பல நபர்கள் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
21 ஆம் திகதிக்கு முன் அம்பலப்படுத்தப்படுவார்கள்
தெய்யந்தர பகுதியில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். இதன்போது ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏப்ரல் 21 ஆம் திகதி மீண்டும் ஈஸ்டர் தாக்குதல்களின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
பெரும்பாலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இதற்குப் பொறுப்பான ஒரு குறிப்பிடத்தக்க குழுவை அம்பலப்படுத்த முயற்சிக்கிறது," என்றார்.