அனுர அரசின் அடுத்த இலக்கு ; கோட்டாபய தலைக்கு மேல் கத்தி!
இலங்கையில் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஸ் சல்லே ஆகியோர் குறிவைக்கப்படுவதாக , அவர்களது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதாயமடைவதற்காக இலங்கையின் உளவுத்துறையினர் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளை நடத்தினர் என்ற கூற்றை நிறுவ அனுரகுமார அரசாங்கம் முற்பட்டுள்ளதாகவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
சனல் 4 ஆவணப்படம் முன்வைத்த குற்றச்சாட்டு
தாக்குதல்களை இலங்கையின் புலனாய்வு அமைப்புகளுடன் தொடர்புபடுத்தும் வகையில் ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட சனல் 4 இன் ஆவணப்படம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை, நிறுவ அசாத் மௌலானாவை பயன்படுத்த அரசு முற்பட்டுள்ளது.
இந்நிலையில் புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக வாக்குமூலம் பெறுவதற்காக மௌலானா இலங்கைக்குத் திரும்புவதற்கு அரசாங்கம் உதவுவதாகக் கூறப்படும் நிலையிலேயே முன்னைய ஜனாதிபதி கோத்தபாய ஆதரவாளர்கள் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர்.