உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட கொலையாளிகள் யார்?
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட கொலையாளிகள் யார் என்பது விரைவில் அம்பலப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உயர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட தரப்புகள் யார் என்பதும் அது தொடர்பான உண்மையான தகவல்களும் விரைவில் வெளியிட அம்பலமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தங்களது பொறுப்புக்களை மறந்து நேர்மையை கைவிட்டு அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கும் அதனை தக்க வைத்துக் கொள்வதற்கும் தலைவர்கள் எவ்வளவு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டார்கள் என்பது குறித்த உண்மைகள் வெளிப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அவ்வாறான ஒரு ஆபத்தான செயற்பாடு என கர்தினால் வெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
“ அவர்கள் உண்மையை எவ்வளவு மூடி மறைக்க முயற்சித்தாலும் ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்கள் நிச்சயமாக அம்பலப்படுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
நீர் கொழும்பு புனித ஆனா தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.