சி.ஐ.டியினரிடம் யோசித சிக்கியது எப்படி?
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித்த ராஜபக்ச தன்னை தடுத்துவைத்திருந்த வேளை பாயில் உறங்கச்சொன்னார்கள் தேங்காய் சம்பலும் சோறும் தந்தார்கள் என தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் சனிக்கிழமை நான் வீட்டிலிருக்கவில்லை.எனது குடும்பத்தினரும் வீட்டில் இருக்கவில்லை. இதனால் எனது வீடு பூட்டியிருந்தது. நான் பெலியத்த இடமாறும் பகுதிக்கு அருகில் சென்றவேளை போக்குவரத்து பொலிஸை சேர்ந்த ஒருவர் எனது வாகனத்தை மறித்தார்.
முதலில் அவர் எனது வாகன பதிவுகுறித்த ஆவணங்களை சோதனையிட்டார். காப்புறுதி வாகனசாரதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றையும் அவர் சோதனையிட்டார்.
என்னை தடுத்து நிறுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார். சிஐடியினர் அந்த பகுதிக்கு வரும்வரை என்னை அங்கேயே இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
யோசித கைது
அவர்கள் என்னை விசாரிக்கவுள்ளனர் என அவர் தெரிவித்தார். அங்கிருந்த அலுவலகத்தின் ஆசனத்தின் அமர்ந்திருக்குமாறு என்னை அவர் கேட்டுக்கொண்டார் நான் பெலியத்தையில் உள்ள வீட்டிற்கு சென்று அங்கு காத்திருக்கின்றேன் என அவரிடம் தெரிவித்தேன்.
ஆனால் அவர் பணிவான முறையில் அதனை ஏற்கமறுத்துவிட்டார்.
நான் எனது ஆதரவாளரின் திருமணவீட்டிற்கு சென்றுகொண்டிருந்தேன், நான் அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னால் திருமண நிகழ்வில் கலந்துகொள்ள முடியாது என தெரிவித்தேன்.
என்னை தடுத்துநிறுத்துவார்கள் என்பது எனக்கு தெரியாத போதிலும், எனது வீட்டிலிருந்து நான் அதிவேக வீதியை நோக்கி பயணித்த ஆரம்பித்த தருணத்திலிருந்து இருவர் மோட்டார் சைக்கிளில் என்னை பின்தொடர்கின்றார்கள் என்பது எனக்கு தெரிந்திருந்தது.
சிஐடியினர் அங்கு வந்து சேர்ந்ததும் அவர்கள் என்னை தங்களது வாகனத்திற்கு வருமாறு அவர்கள் உத்தரவிட்டனர், அதன் பின்னர் கொழும்பிலுள்ள சிஐடியினர் தலைமையகத்திற்கு புறப்பட்டோம் -இந்த பயணம் மூன்றரை மணித்தியாலங்கள் நீடித்தது.
ஐந்தரை மணியளவில் அவர்கள் என்னிடம் சிறு வாக்குமூலமொன்றை பதிவு செய்துவிட்டு கொழும்பு மேலதிக நீதவானின் இல்லத்திற்கு கொண்டு சென்றனர்.என்னை தடுத்துவைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.