ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்: மைத்திரிபால சிறிசேன அதிரடி
சனல் 4 தொலைக்காட்சி கடந்த வாரம் வெளியிட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துமாறு ஐ.நாவிடம் நேரில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்றையதினம் (11-09-2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சனல் 4 தொடர்பில் விசாரணை அவசியம் என ஐநாவும் வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, ஓரிரு நாட்களில் ஐ.நாவின் இலங்கை பிரதிநிதியை சந்தித்து, சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
4 ஆண்டுகளாக என்னை இலக்கு வைத்துதான் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் நடந்தது என்ன என்பது சனல் s4 காணொளி ஊடாக தெளிவாகின்றது எனவும் தெரிவித்தார்.