விஜய், அநுரகுமார இருவருமே நடிகர்கள் ; சபையில் சலசலப்பை ஏற்படுத்திய ஜீவன்
விஜய் சினிமாவில் நடித்துவிட்டு அரசியலுக்கு வந்தார், ஆனால் அநுர அரசியலுக்கு வந்து இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார் இருவருக்கும் இடையிலான ஒரே வித்தியாசம் இதுதான் என ஜீவன் தொண்டமான் சபையில் தெரிவித்தமை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்தார்.

விஜய்க்கு தனது வாழ்த்துகள்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் அவர் விரைவில் இலங்கைக்கு வருவார் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் தமிழ் மக்கள் தொடர்பிலும் மீனவர் பிரச்சினை தொடர்பிலும் கரிசனை செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை விஜய்யுடன் ஒப்பிட்டுப் பேசிய போது "விஜய் சினிமாவில் நடித்துவிட்டு அரசியலுக்கு வந்தார், ஆனால் அநுர அரசியலுக்கு வந்து இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்" என அவர் சாடினார்.
இருவருக்கும் இடையிலான ஒரே வித்தியாசம் இதுதான் என அவர் சுட்டிக்காட்டியமை சபையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.