ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் வழக்கு ; பிரதிவாதிகள் தரப்பு சாட்சியமும் நிறைவு
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று (08) நிறைவடைந்தது.
கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான இந்த வழக்கு மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டது.

அரசுத் தரப்பு 249 நாட்கள் சாட்சியங்களை முன்வைத்த நிலையில், பட்டியலிடப்பட்ட 2,309 சாட்சிகளில் 547 பேர் மட்டுமே நீதிமன்றில் சாட்சியமளித்தனர்.
பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களும் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்தத் தாக்குதல்களில் 224 பேர் உயிரிழந்ததுடன், 584 பேர் காயமடைந்தனர்.
24 பிரதிவாதிகளுக்கு எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி காலை 9 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.