ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்; முக்கிய நபர் விடுதலை!
நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. கடந்த 2019ஆம் அண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் பல இடங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அந்த தாக்குதல் தடுப்பதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.