துபாய் ரோடெல்லாம் கண்ணாடி மாதிரி ...சாப்பாடு கூட போட்டு சாப்பிடலாம்!(Video)
துபாய் வீதிகள் தொடர்பில் ஒரு வினோத செயலை செய்து பிரபல டிக்டாக்கர் எலோனா எனும் பெண் வெளியிட்ட காணொளி வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமா திரப்படம் ஒன்றில் துபாயில் வேலை பார்த்தாக கூறி நடிகர் வடிவேலு நடித்ததை யாராலும் மறக்க முடியாது. அதில் ஒரு காட்சியில் துபாயில் இருக்கும் சாலைகளின் தரம் மற்றும் சுத்தத்தை கூறும் அவர், துபாய் ரோடுலாம் கண்ணாடி மாதிரி இருக்கும்.
துபாய் சாலைகள் சுத்தமானவை
அதுல சாப்பாடு கூட போட்டு சாப்பிடலாம் அவ்வளவு சுத்தம் என்று கூறுவார். இந்நிலையில் வடிவேலு கூற்றை மெய்ப்பிப்பதுபோல பிரபல டிக்டாக்கர் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியில் துபாய் சாலைகள் எவ்வளவு சுத்தமானவை என்பதை அனைவருக்கும் காட்டுவதற்கு வித்தியாசமான முயற்சியை செய்துகாட்டியுள்ளார்.
التيكتوكر ايلونا كرافر مقيمة في #دبي قررت ان تشتري زوج ابيض من الجوارب لكي تختبر لكم نظافة مدينة #دبي والتي حازت على جائزة المدينة الانظف في العالم .
— محمد الكواري (@kuwarimud) May 11, 2023
والنتيجة مذهلة ?? ✨ pic.twitter.com/nujuKpo76Q
எலோனா என்ற அந்த பெண் டிக்டாக்கர் துபாய் சாலைகளின் தூய்மையை காட்டுவதற்காக, கால்களில் ஷூக்கள் அணியாமல் வெறும் வெள்ளை நிற சாக்ஸ்களை அணிந்து கொண்டு சாலைகளில் வலம் வந்துள்ளார்.
சாலையில் நடந்து சென்று வந்தப்பின் தனது கால் சாக்ஸ்களை தூக்கி காட்டுகிறார் எலோனா. அவை மீது தூசியோ, அழுக்கோ படியாமல் வெள்ளை நிறத்திலேயே இருப்பது வீடியோவில் தெரிகிறது.
இந்த வீடியோ இணையத்தில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு பகிரப்படுகிறது.