எலும்புகளை இரும்பைப் போல் வஜ்ரமாக்கும் கால்சியம் நிறைந்த உலர் பழங்கள்
சிறுவயதிலிருந்தே எலும்புகளை வலுவாக வைத்திருப்பது முக்கியம், எனவே தினமும் பால் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஏனெனில் அதில் கால்சியம் நிறைந்துள்ளது. ஆனால் பாலுடன், நம் உடலின் கால்சியம் தேவையை பூர்த்தி செய்ய உதவும் பல உலர் பழங்களும் உள்ளன.
பாதம்
உலர் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் பாதாம் கால்சியத்தின் சிறந்த மூலமாகும், இது எலும்புகளை பலப்படுத்துகிறது. இதனுடன், வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் உள்ளன.
100 கிராம் பாதாம் பருப்பில் 265 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இது உங்கள் உணவில் தவறாமல் சேர்க்கப்பட வேண்டும்.
எள்
எள் மிகவும் ஆரோக்கியமானது. எள்ளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களை நாம் அன்றாட உணவில் பயன்படுத்தினாலும், குளிர்காலத்தில் எள் அதிக அளவில் உட்கொள்ளப்படுகின்றன.
இதில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எள்ளை எளிதில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எள்ளு மிட்டாய், எள்ளுருண்டை என வகைவகையாய் எள்ளை சமைத்து சாப்பிடலாம். 100 கிராம் எள்ளில் சுமார் 975 மி.கி கால்சியம் உள்ளது.
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகள், நீரிழிவு, புற்றுநோய், அல்சைமர் மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவியாக இருக்கும். அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள இதில் கால்சியமும் ஏராளமாக உள்ளது.
100 கிராம் சூரியகாந்தி விதையில் சுமார் 120 மி.கி கால்சியம் உள்ளது.
பிஸ்தா
பிஸ்தா சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, பல குணங்கள் நிறைந்தது. பிஸ்தாவில் மோனோசாக்கரைடுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் உள்ளன, அவை கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் உள்ள பிஸ்தா எலும்புகளை பலப்படுத்துகிறது. 100 கிராம் பிஸ்தாவில் சுமார் 131 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.
அத்திப்பழம்
இரத்த சோகையை போக்க அத்திப்பழம் சாப்பிடுவார்கள். அத்திப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதைப் போலவே கால்சியம் சத்தும் அதிகம் உள்ளது. நார்ச்சத்து நிறைந்த இந்த உலர் பழத்தில் இயற்கையான இனிப்பு உள்ளது.
100 கிராம் அத்திப்பழத்தில் சுமார் 55 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. அத்திப்பழத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டால் நல்லது.