சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் உலர் பழம்
அதிக சுவை கொண்ட பேரீச்சம்பழம் அனேகமாக குளிர்காலத்தில் உட்கொள்ளப்படுகிறது.
ஏனெனில் அவை உடலுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்த உதவுகிறது. மேலும் இதில் என்னேற்ற ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.
இதன் காரணமாக, சுகாதார நிபுணர்கள் அடிக்கடி இந்த உலர் பழத்தை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். பொதுவாக இந்த பழம் இனிப்பாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாமா என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது.

இதனை தெளிவுபடுத்துவதற்கு நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
காணப்படும் ஊட்டச்சத்துக்கள்
பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து தவிர இதில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி6, வைட்டமின் கே, தாமிரம், மக்னீசியம், நியாசின், இரும்பு சத்து மற்றும் பொட்டாசியம் ஆகியவை ஏராளமாக உள்ளன. எனவே இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
பேரீச்சம்பழங்களில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால், அவற்றைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காது.

நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளில் 2 பேரீச்சம்பழங்களை சாப்பிடலாம், ஆனால் உடல்நிலை சரியில்லை என்றால் அதன் அளவை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே தீர்மானிக்க வேண்டும்.
பேரீச்சம்பழத்தில் உள்ள மெக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்துகிறது.

பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாது.
உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக புகார் கூறுபவர்கள் பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும்.
பேரீச்சம்பழம் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
உடல் எடையை குறைக்க உதவுகிறது.