சட்டத்தரணி, மனைவி மரணம் ; பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
அக்குரேகொட இரட்டைக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய கார் ஓட்டுநரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து, சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். கார் ஒன்றில் வந்த குழுவினர் சுமார் 10 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடிய பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்
இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு திசை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர்கள் பயணித்த காரின் ஓட்டுநராகச் செயற்பட்ட சந்தேகநபரே தற்போது தேடப்பட்டு வருகிறார்.
விபரங்கள் பெயர்: களுஆரச்சிலியனகே நிலுக்ஷ வீரசிங்க
முகவரி: வீரசிங்க மல்ஷாலா, பரவகொட, இமதுவ
தேசிய அடையாள அட்டை இலக்கம்: 199714103549
சந்தேகநபர் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்
பணிப்பாளர் / மேல் மாகாண (தெற்கு) குற்றப் பிரிவு: 071 - 8592279
பொறுப்பதிகாரி / மேல் மாகாண (தெற்கு) குற்றப் பிரிவு: 071 - 8596065