மதுபோதையில் யாசகர்களுக்கிடையே வெடித்த மோதல் ; வெட்டிக்கொல்லப்பட்ட ஒருவர்
நாத்தாண்டிய நகரில் மதுபோதையில் இருந்த மூன்று யாசகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காக்கப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

முதற்கட்ட விசாரணை
நாத்தாண்டிய நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடப்பதாக மாரவில பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அந்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தனர்.
யாழ். விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தமிழ் அமைச்சர் எதிர்ப்பு; நாக விகாரைக்குள் ஒளிக்கப்பட்ட சிலை ; பகீர் தகவல்
விசாரணையின் போது, உயிரிழந்த நபரின் இடது கை மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்டிருந்த கடுமையான வெட்டுக் காயத்தால், அதிகளவில் இரத்தம் வெளியேறியதே அவரது மரணத்திற்குக் காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மாரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.