கிராமசேவையாளரை தாக்கிய மதுபோதை குழு!
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாசீவன் தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராமசேவகர் மதுபோதையில் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (20) பிற்பகல் வேளை இச்சம்பவம் நாசீவன் தீவு துறையடியில் இடம்பெற்றுள்ளது. பாதிப்பிற்குள்ளானவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட கிரம சேவகர் தெரிவிகையில்,
அத்துமீறி காணியை சுற்றி வேலி
பிரதேச வாசி ஒருவர் கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றினுள் அத்துமீறி காணியை சுற்றி வேலி அமைத்திருந்த தகவல் அறிந்து தாம் நேரில் சென்று அதனை அகற்றுமாறு கூறியபோது அவ்விடத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.
குறித்த காணி விடயம் தொடர்பாக மேற்படி நபர் இன்று தமது அலுவலகத்திற்கு வருகை தந்து முரன்பாட்டில் ஈடுபட்டதாகவும் இதன்போது இருவருக்குமிடையில் கருத்துமுரன்பாடு ஏற்பட்டுள்ளாக அவர் தெரிவித்தார்.
பின்னர் தமது வெளிக்கள கடமை நிமித்தம் வெளியில் சென்றபோது குறித்த நபர் உட்பட 5 பேர் கொண்ட குழுவினர் கம்பு, பொல்லுகள் சகிதம் வந்து தம்மை தாக்கியதாக தெரிவித்தார்.
இதன்போது சம்பவத்தை கண்ட பொதுமக்கள் சிலர் தம்மை அவர்களிடமிருந்து பாதுகாத்தாக மேலும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.