நாட்டுக்குள் நுழைந்த இந்திய பெண் அதிரடியாக கைது
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய பெண் ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இந்தியா நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஆவார். கைதான பெண் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்தில் இருந்து ஹாங்காங் ஊடாக இன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
200 கிராம் குஷ் போதைப்பொருள்
இதன்போது, விமான நிலைய அதிஜகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பெண் கொண்டு வந்த பயணப்பொதியிலிருந்த உணவு பொதிகளில் இருந்து ஒரு கிலோ 200 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பறற்ப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட பெண் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.