யாழில் இரகசிய இடத்தில் இளைஞர்களின் மோசமான செயல்; நால்வர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்வதற்கு தயார் நிலையில் இருந்த நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை (19) குறித்த இளைப்ஞர்கள் கைதாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
போதைப்பொருள் விற்றவர் அடையாளம்
கோண்டாவில் - இருபாலை வீதியில் உள்ள இரகசிய இடமொன்றை இளைஞர்கள் போதைப்பொருள் நுகர்வுக்கு பயன்படுத்துவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் விரைந்து சென்றனர்.
அங்கு நான்கு இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் காணப்பட்ட நிலையில் அவர்களை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , ஊசியும் (சிறிஞ்) மீட்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் , குருநகர் பகுதியை சேர்ந்தவரிடம் இருந்து தான் இந்த போதைப்பொருட்களை கொள்வனவு செய்வதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் போதைப்பொருளை விற்பனை செய்தவரை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை யாழில் இளையோர் மத்தியில் போதைப்பொருள பாவனை அதிகரித்துவருவதுடன் , அதலாம் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.