பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை; சிக்கிய இருவர்
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீகொடை, ஓவிட்டிகம பிரதேசத்தில் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் மீகொடை பொலிஸாரால் இன்று (12) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இரண்டரை கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்
மீகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீகொடை, ஓவிட்டிகம பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், வாடகை வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டரை கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகளும் குறித்த வாடகை வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்