இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனை
இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 7 பேர் வெலிமடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை, வெலிமடை பிரதேசத்தில் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைதானவர்களில், திருமணமான தம்பதி ஒன்றும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
7 பேர் பொலிஸாரால் கைது
வெலிமடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வெலிமடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களான தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட தம்பதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஏனைய 5 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் 24 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 620 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.