யாழில் இளைஞனின் உயிரை பறித்த அளவுக்கு மீறிய போதை பழக்கம்
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவர் மலசல கூடத்திற்குள் மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த இளைஞன் நேற்றைய தினம் வீட்டில் உள்ள மலசல கூடத்திற்கு சென்ற நிலையில் , நீண்ட நேரமாகியும் வராத நிலையில் வீட்டார் சென்று பார்த்த போது மலசல கூடத்திற்குள் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

அதனை அடுத்து அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , மரண விசாரணையின் போது குறித்த இளைஞன் சில காலமாக கடுமையான போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாகியிருந்தமை தெரிய வந்துள்ளது.
அதேவேளை யாழ்ப்பாண இளையோரிடையே போதைப்பழக்கம் அதிகமாக வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.