மாணவர்களை இலக்கு வைக்கும் தொழிநுட்ப திறன் கூடிய போதைப்பொருள் பாவணை!
தற்போது சந்தையில் புதிய வித போதைப் பொருள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலைச் சிறார்களை இலக்கு வைத்து சந்தைப்படுத்தப்பட்டு, பாடசாலைகளில் விரிவுபடுத்தப்படுகிறது.
பார்க்கும் பார்வையில், இது ஒரு வாசனை திரவிய பாட்டில் அல்லது ஒரு இன்ஹேலரின் வடிவத்தை ஒத்ததாக உள்ளது. மிகவும் விரும்பத்தக்கது.
நல்ல வாசனை கொண்டது இது மொபைல் போன் சார்ஜர் மூலம் சார்ஜ் செய்யக்கூடிய மின்சாரத்தில் ஆவியாகக்கூடியது .
இந்த ஆவியை மாணவர்கள் சுவாசிக்கும் போது போதை உருவாகின்றது .
மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இது மிகவும் அபாயகரமானது, என்பதோடு எதிர்கால இளஞ்சமூகத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையாகவும் இதனை எச்சரிக்கையோடு நோக்க வேண்டியுள்ளது.
ஆகவே குழந்தைகளை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.