அமைச்சரின் காரை போதையில் ஓட்டிய சாரதி!
அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ காரை மதுபோதையில் செலுத்திச் சென்ற அமைச்சரின் சாரதி கைது செய்துள்ளனர்.
அத்துடன் அமைச்சரின் உத்தியோகபூர்வ காரும் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதான சாரதி மதுபோதையில் இருந்தமை தெரிய வந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் பயணிக்கவில்லை
எனினும் அமைச்சர் அந்த வாகனத்தில் பயணிக்கவில்லை. அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இதன்போது உத்தியோகபூர்வ வாகனத்தில் இருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை இந்த சம்பவத்தை அடுத்து நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் அமைச்சரின் சாரதியும் பொலிஸ் கான்ஸ்டபிளும் பொலிஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.