சாரதியின் தூக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்; நூலிழையில் உயிர் தப்பிய 8 பேர்
Bandaranaike International Airport
Colombo
Accident
Hatton
By Sahana
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஹட்டன் - கொட்டகலை நோக்கிப் பயணித்த சிற்றூர்தியொன்று கவிழ்ந்ததில், அதன் சாரதி பலத்த காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர் வட்டவளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை காவல்நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இன்று (14) முற்பகல் 9 மணியளவில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை ரொசல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சிற்றூர்தியில் 8 பேர் இருந்ததாகவும், அவர்களுக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US