அரச ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜனாதிபதியின் அறிவிப்பு
அரச ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பிற்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு நிதியாண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை (07) நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சபைக்கு சமர்ப்பித்து உரையாற்று கையில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அதன்படி அரசாங்க ஊழியர்களின் இந்த இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி முதல் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை அதிகரிப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை 10,000 ரூபாவாக வழங்கப்பட்ட பண்டிகை முற்பணத் தொகையினை 15,000 ரூபாவாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.