எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து; அமைச்சர் பிமல் அறிவிப்பு
Parliament of Sri Lanka
Bimal Rathnayake
NPP Government
By Sulokshi
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த 6 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.
அரசியலை இலாபம் ஈட்டும் தொழிலாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், பொதுச் சேவையில் நேர்மையை ஊக்குவிப்பதும் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அத்துடன் கொழும்பில் உள்ள 4 அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் இனி நீதித்துறை சார்ந்த பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகளுக்கான வரப்பிரசாதங்களைக் குறைத்து, மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US