சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய் ; டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிக்காரர்கள்
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். முக்கியமாக இந்த செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். நீண்ட காலமாக கைக்கு கிடைக்காமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் நிதி பிரச்சனைகள் குறையும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் மற்றும் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கலாஙம். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் நிலை வலுவடையும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் உங்களுக்கு ஒரு புதிய பொறுப்பு வரக்கூடும மற்றும் அதை நீங்கள் முழுப் பொறுப்புடனும் நம்பிக்கையுடனும் நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிலம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயம் கிடைக்கும். நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். மேலும் இக்காலத்தில் உங்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பெயர்ச்சி காலத்தில் எடுக்கும் முக்கியமான முடிவுகள் எதிர்காலத்தில் நல்ல நன்மைகளைத் தருவதாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் செயல்பாடும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
