காபூலில் இரட்டை குண்டு வெடிப்பு; வெளியான தகவல்
ஆப்கானிஸ்தான் தலைநகரில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு அருகில் இரண்டு சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக ஆதராங்களை மேற்கொள்ளிட்டு சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூலின் கசர்தார் மொஹமட் தாவுத் கான் வைத்தியசாலைக்கு அருகிலேயே செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 13:00 மணியளவில் (8:30 GMT) இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எனினும் இந்த குண்டுவெடிப்பில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது உடனடியாகத் தெரியவில்லை.
இது ஒரு கார் வெடிகுண்டு சம்பவம் என சாட்சிகள் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படும் அதேவேளை
குண்டு வெடிப்பு தொடர்பில் தலிபான் அதிகாரிகளிடம் இருந்து எந்த கருத்தும் உடனடியாக கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.