தயிர் பிரியர்களே! இதை எப்போதும் இதனுடன் சேர்த்து உண்ணாதீர்கள்
தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் எண்ணற்றவை. ஆனால் தயிர் சாப்பிட்டால் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் சில விஷயங்களும் உள்ளன.
தயிரை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் அதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி, செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
மீன்
தயிரை மீனுடன் சாப்பிடக்கூடாது. தயிர் மற்றும் மீன் இரண்டிலும் புரோட்டீன்கள் நிறைந்துள்ளன அவற்றை ஒன்றாகச் சாப்பிடும்போது அஜீரணம் மற்றும் இரைப்பைக் கோளாறுகளை உண்டாக்கும்.
வறுத்த பொருட்கள்
வறுத்த பொருட்களுடன் தயிரை ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது. எண்ணெய் நிறைந்த உணவை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது செரிமானத்தை கெடுக்கும். நாள் முழுவதும் சோம்பலாக இருக்கும்.
வெங்காயம்
பெரும்பாலும் தயிரில் வெங்காயத்தைப் போட்டு ரைதா செய்து மிகுந்த ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள்.
ஆனால் இது சரியான கலவை அல்ல. இப்படி செய்வதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தயிருடன் வெங்காயம் கலந்து சாப்பிட்டால் அமிலத்தன்மை, வாந்தி, அரிக்கும் தோலழற்சி, சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.