நாம் காலையில் எழுந்தவுடன் இதனை செய்யவே கூடாது
ஒரு நாளின் தொடக்கம் தான் காலைநேரம், இந்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய ஆரோக்கியமான விஷயங்கள் தான் அன்றைய நாள் முழுக்க நம்மை உற்சாகமாக வைத்திருக்கிறது.
நமது வேகமான வாழ்க்கையின் காரணமாக நம்மில் பலர் சில மோசமான காலைப் பழக்கங்களைக் கடைப்பிடிக்கிறோம்.
அவை நமக்குத் தீங்கு விளைவிக்கிறது.நாம் கடைபிடிக்கக்கூடிய மோசமான பழக்கவழக்கம் நம்மீது உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், பின்னாளில் நமது உடல் மற்றும் மன நலனை மோசமாக பாதிக்கின்றது.
கைவிட வேண்டிய பழக்க வழக்கங்கள்
தொழில்நுட்பம்
தொழில்நுட்பம் நம்மை அடிமைப்படுத்திவிட்டது அதிலும் குறிப்பாக கையடக்க தொலைபேசி சொல்லவே வேண்டாம்.
காலையில் எழுந்ததும் முதலில் சமூக ஊடகங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
காலையில் நாம் இதை பார்க்கும்போது நாம் படிப்பதைப் பொறுத்து மன அழுத்தமும், கவலையும் ஏற்படுகிறது.
தினமும் காலையில் செய்ய வேண்டிய முதல் விஷயம் தியானம், 10-15 நிமிடங்கள் இதைச் செய்வது நம் நாளைத் தொடங்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.
அலாரம் ஒலி கேட்டு எழுந்திருப்பது
அலாரம் ஒலி கேட்டு எழுந்திருப்பது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் காலைப் பழக்கங்களில் ஒன்றாகும்.
இது உளவியல் ரீதியாக தயார்படுத்துவதற்கும், நாளுக்குத் தயாராவதற்கும் நாம் செலவிட வேண்டிய நேரத்தைக் குறைக்கிறது.
அவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு கவனக்குறைவு ஏற்படுவதோடு மன அழுத்தம் அதிகரிக்கிறது.
அலாரம் ஒலி உறக்கநிலையைத் தாக்குவது நமது தூக்க மன நிலையை தொந்தரவு செய்கிறது, அலாரத்தை தவிர்க்க நாம் சீக்கிரம் தூங்க வேண்டும் அல்லது ஒரு யதார்த்தமான நேரத்திற்கு அலாரத்தை அமைக்க வேண்டும்.
அப்போது நாம் புத்துணர்ச்சியோடு விழிக்கலாம். அலாரத்தை ஸ்னூஸ் செய்யும் பழக்கத்தை கைவிடுவதன் மூலம் நமது தூக்க சுழற்சியை மேம்படுத்தலாம்.
காலை உணவு
காலை உணவு தான் நமது அன்றைய நாளுக்கான ஆற்றலை தருகிறது, ஏழு முதல் எட்டு மணி நேர தூக்க சுழற்சிக்குப் பிறகு சாப்பிடுவது அன்றைய நாளுக்கான முக்கியமான உணவாக கருதப்படுகிறது.
நீண்ட காலமாக பசியுடன் இருப்பது நீண்ட காலத்திற்கு நம் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. காலையில் உணவு வகைகளுடன் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் பழக்கத்தை வைத்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய விஷயங்களையும் பட்டியலிடுவது மிகவும் முக்கியம். இதுபோன்று அட்டவணை வைத்துக்கொள்வது நமது நாளை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது.
இதுபோன்று அட்டவணை தயாரித்துக்கொள்வது படுக்கையில் சோம்பேறியாக இருக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தாமல் இருக்கும்.
செய்தித்தாளை படிப்பது
காலை நேரத்தில் செய்தித்தாளை படிப்பது மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அதில் இடம்பெறும் எதிர்மறையான அறிக்கைகள் மற்றும் கட்டுரைகளை காலையில் படிப்பது உங்கள் நேர்மறைத் தன்மையைக் குறைக்கலாம்.
மேலும் செய்திகளைப் படிப்பதன் மூலம் நமது நாளைத் தொடங்க வேண்டாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இருப்பினும் செய்திகளைப் பற்றி அறிந்து கொள்வதும், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதும் அவசியம் தான்.