இரவு உணவிற்குப் பிறகு இந்த தவறுகள செய்தால் உடல் எடை பாதிக்குமாம்
உடல் எடையை குறைப்பதற்காக பலரும் முயற்சி செய்துக் கொண்டு இருக்கும் நிலையில் இரவு உணவிற்குப் பிறகு செய்யும் சில தவறுகள் உடல் எடையை பாதிக்கும்.
பெரும்பாலோர் எடையை பராமரிக்கவும், ஆரோக்கியமான உடலமைப்பைப் பெறவும், சீரான உணவை உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல் மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வது உள்ளிட்ட ஆரோக்கியமான வழக்கத்தை பின்பற்ற முயற்சிக்கிறோம்.
ஆனால் எப்போதாவது, ஆரோக்கியமான உடல் எடை குறைக்கும் பயிற்சிகளைக் கடைப்பிடித்தாலும் உடல் எடை குறைவதில்லை.
உடல் எடை குறைப்பு தவறு
உணவுத் தேர்வுகள் மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறைக்க விரும்பினாலும் உணவுக்குப் பிந்தைய சரியான பழக்கங்களைப் பின்பற்றுவது சாப்பிட்ட பிறகு செய்யும் காரியங்களும் எடை நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இரவு உணவுக்குப் பிறகு காபி குடிப்பது
சிலருக்கு இரவு உணவு முடிந்த உடனேயே காபி குடிக்கும் பழக்கம் இருக்கும்.
ஆனால் இந்த ஒரு பழக்கம் தோற்றத்தையும் எடையையும் மாற்றும்.
காபியில் உள்ள காஃபின் உங்கள் தூக்கத்தை சீர்குலைக்கும்.
இது எடை மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
உணவிற்குப் பிறகு உடனே உறங்குவது
இரவு உணவை முடித்துவிட்டு உடனடியாக படுக்கைக்குச் செல்வது உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தவிர்க்க வேண்டிய மற்றொரு ஆரோக்கியமற்ற பழக்கமாகும்.
இரவு உணவு சாப்பிட்ட உடனேயே தூங்கச் சென்றால், உண்ணும் உணவை ஜீரணிக்க உடலுக்கு போதுமான நேரம் கிடைக்காது. இது எடையை அதிகரிக்கச் செய்யும்.
உணவுக்குப் பிறகு கிரீன் டீ குடிப்பது
க்ரீன் டீ குடிப்பது ஆரோக்கியமானது என்றாலும் இரவு உணவு உண்டவுடன் அதைச் செய்வது தவறு.
இரவு உணவிற்குப் பிறகு கிரீன் டீ குடித்தால் உடல் பாதிக்கப்படும்.
ஏனெனில் செரிமான அமைப்பு முக்கிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை கிரீன் டீ தடுக்கிறது.
உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பது
இரவு உணவிற்குப் பிறகு தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆபத்தானது.
உணவுக்கு இடையிலும் உணவு உண்ட பின்பும் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் இரைப்பைச் சாறுகள் மற்றும் செரிமான நொதிகள் நீர்த்துப்போய்விடும்.
செரிமானச் செயல்பாட்டில் இடையூறுகள் ஏற்படும். இரவு உணவிற்குப் பிறகு 30 நிமிடங்கள் கழித்தே நீர் பருக வேண்டும்.