உங்களுக்கு இதய நோய் வரக்கூடாதா? அப்ப காலையில் எழுந்ததும் இந்த விஷயங்களை செய்யாதீங்க
தற்போது உலகில் இதயம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இப்படி இதய பிரச்சனைகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான்.
குறிப்பாக காலையில் எழுந்ததும் மேற்கொள்ளும் ஒருசில பழக்கங்கள் இதயத்தின் செயல்பாட்டை பாதித்து, பிரச்சனைகள் வரத் தூண்டுகின்றன.

மொபைல் போனை பார்ப்பது
காலையில் எழுந்ததும் மொபைல் போனை செக் செய்வது. இப்படி செய்யும் போது உடலில் கார்டிசோல் அளவு அதிகரிக்கும். அதுவும் போனை தொடர்ந்து ஸ்க்ரோல் செய்யும் போது, மன அழுத்த ஹார்மோன்கள் இன்னும் அதிகரிக்கும் மற்றும் சிம்பதெடிக் டோனும் அதிகரிக்கும். இதன் மூலம் இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாள் முழுவதும் ஒருவித மன அழுத்தத்தில் வைத்திருக்கும்.

காபியை மட்டும் குடிப்பது
காலை உணவை தவிர்த்து, காபியை மட்டும் குடிப்பது. இப்படி குடிக்கும் போது காபியில் உள்ள காப்ஃபைன் அட்ரினலைன் என்னும் ஹார்மோன் அளவை அதிகரிக்கும். பின் சிறிது நேரம் கழித்து இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். பின்பு நிறைய பசி எடுக்கும். அப்போது பசியைப் போக்க மூளையானது ஜங்க் உணவுகளை சாப்பிடத் தூண்டும். அந்த நேரத்தில் பஜ்ஜி, சமோசா போன்றவற்றை சாப்பிட்டால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் இதயம் தவியாக தவிக்கும். எனவே காலை உணவுக்கு புரோட்டீன், நார்ச்சத்து போன்றவை நிறைந்த உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும்

படுக்கையில் இருந்து வேகமாக எழுவது
படுக்கையில் இருந்து வேகமாக எழுவது. இது முக்கியமாக வயதானவர்களுக்கு பொருந்தும். இப்படி வேகமாக எழும் போது, கால்களில் இரத்த ஓட்டம் சட்டென்று அதிகரிக்கும், மூளைக்கு செல்லும் இரத்தத்தைக் குறைக்கும். இதனால் தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். எனவே மெதுவாக எழுங்கள்
