சிக்கனுடன் மறந்தும் கூட இந்த உணவுகளை சாப்பிட்டுவிடாதீர்கள்
உலகளவில் பலரும் விரும்பி சாப்பிடும் இறைச்சி உணவுகளில் கோழிக்கறி முதன்மையாக உள்ளது. அவ்வாறு இருக்கும் இந்த சிக்கனுடன் இணைந்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன என்பதை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
மீன்
பலரும் அசைவ விருந்து என்றால் சிக்கன் உடன் மீனும் சேர்த்துகொள்வதுண்டு. ஆனால் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடகூடாது. சிக்கனில் இருக்கும் புரதம் வேறு மீனில் இருக்கும் புரதம் வேறு. இரண்டும் இணையும் போது ஒன்றுக்கொன்று வேதியியல் வினை புரிந்து உடலில் பாதிப்பை ஏற்படுத்தலாம். சிக்கன் போன்று மீன் நல்லது. ஆனால் இரண்டையும் தனித்தனியாக எடுத்துகொள்ள வேண்டும். சேர்த்து சாப்பிட கூடாது.
உருளைக்கிழங்கு
சிக்கன் புரதம் நிறைந்தது உருளைக்கிழங்கு ஸ்டார்ச் கொண்டது. இந்த ஸ்டார்ச் கொண்ட உருளைக்கிழங்கு வெவ்வேறு செரிமான நொதிகள் தேவைப்படுகின்றன. இவை இரண்டையும் இணைத்து சாப்பிடும் போது செரிமானம் சிக்கலாகும். இதுவீக்கம், அஜீரணம் மற்றும் வயிறு காலியாவதில் தாமதம் போன்றவற்றை உண்டு செய்யும். அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் நியூட்ரிஷியன் ஆனது அதிக புரத உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும் என்றும், சீக்கிரம் ஜீரணமாகும் ஸ்டார்ச் உணவுகளுடன் இணைப்பது நொதித்தல் மற்றும் வாயு உண்டு செய்யும் என்றும் கூறுகிறது.
தேன்
தற்போது ஹனி சிக்கன் அல்லது தேன் சிக்கன் என்பது பிரபலமான உணவாக பார்க்கப்படுகிறது. தேன் ஆரோக்கியமானது என்றாலும் தேனில் இருக்கும் அதிக சர்க்கரை உள்ளடக்கம் ஆனது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். தேன் மகரந்த ஒவ்வாமை இருந்தால் அந்த மகரந்த -ஒவ்வாமை எதிர்வினைகள் சில சாத்தியமான பக்கவிளைவுகளை உண்டு செய்யலாம்.
இது செரிமான கோளாறுகளையும் உண்டு செய்யலாம். கோழி இறைச்சி ஆனது புரதம் நிறைந்தது இது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். ஆனால் சர்க்கரை சேர்த்த உணவுகள் விரைவில் இரத்த சர்க்கரையை அதிகரித்து செரிமானத்தில் தலையிடலாம். ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷியன் இதழ் ஆய்வின் படி இனிப்பு உணவுகள் அதிக புரத உணவுகளுடன் சேர்த்து கொள்வது இன்சுலின் ஸ்பைக் ஏற்பட வாய்ப்புண்டு என்கிறது. மேலும் இது வளர்சிதை மாற்ற நோய்க்குறி அல்லது உடல் பருமனை உண்டு செய்யலாம்.
தயிர்
சிக்கனுடன் தயிர் சேர்த்து சமைப்பது பலரது விருப்பமாக உள்ளது. தயிரில் சிக்கனை ஊறவைத்து சமைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பால், பால் பொருள்களான சீஸ், தயிர் போன்றவற்றுடன் கோழி இறைச்சியை இணைப்பது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஹார்வர்ட் T.H. Chan School of Public Health கூற்றுப்படி கோழி போன்ற புரதம் நிறைந்த உணவுகள் பால் பொருள்கலில் இருக்கும் கொழுப்புகளின் செரிமானத்தை மெதுவாக்கும். இது இரைப்பை குடல் அசெளகரியத்தை உண்டு செய்யலாம். இதனால் வீக்கம், அஜீரணம் அல்லது அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
எலுமிச்சை பழச்சாறு
சிக்கனுடன் சிட்ரஸ் தன்மை கொண்ட ஆரஞ்சு, அன்னாசி , எலுமிச்சை பழச்சாறுகள் தவிர்க்க வேண்டும். இது அதிக அமிலத்தன்மை கொண்டவை. கோழி இறைச்சியுடன் எடுக்கும் போதுபுரத செரிமானத்தில் இது தலையிடும். புரதத்தை சிதைத்து ஜீரணிக்க கடினமாக்கும். இது அமில ரிஃப்ளஸ் ஏற்படுத்தலாம். அமில உணவுகள் புரதங்களுடன் இணைப்பது செரிமானத்தை மோசமாக பாதிக்கும். மேலும் இது அமில ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளை தூண்டலாம். பழமாக இல்லாமல் ஜூஸாக எடுத்துகொள்ளலாம் என்றும் பலர் நினைப்பதுண்டு. ஆனால் பழச்சாறும் சிக்கனுடன் சேர்த்து எடுக்க கூடாது.