கொரோனா காலத்தில் எப்பவும் உடலில் எதிர்ப்பு சக்தி வேணுமா? இந்த சிறிய பழம் போதும்!
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் வேகமெடுத்து வருவதுடன் அதன்பிறழ்வான ஓமிக்ரான் தொற்று இதுவரை 128க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பரவிவிட்டது.
இதனால் நாம் அனைவரும் நம் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. இதற்காக நாம் குறிப்பிடச் சில உணவு வகைகளையும் உட்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகின்றது .

அந்தவகையில் மிகச்சிறிய பழமான இலந்தைப்பழம் நமக்கு உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகருக்க உதவுகின்றது. இதனை ஆங்கிலத்தில் பெர் அல்லது ஜுஜுப் (jujube) என அழைக்கப்படுகிறது.
இனிப்பும் புளிப்புமாக இருக்கும் இந்தப் பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் மலச்சிக்கலைத் தீர்க்கிறது, மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மையை குணப்படுத்துகிறது.

அதோடு இன்னும் பல நோய்களுக்கும் இது அருமருந்தாவதாக கூறப்படுகின்றது. இலந்தைப்பழத்தில் வைட்டமின் ஏ, சி நிறைவாக இருக்கிறது. இத்துடன் பொட்டாசியம், இரும்புச் சத்து, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன.
அதுமட்டுமல்லாது அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் 24ல் 18 வகையான அமினோ அமிலக் கூறுகள் இந்தப் பழத்தில் உள்ளன. இதில் கலோரி மிகமிகக் குறைவு. அதனால் இதனை இடைப்பட்ட நேர ஸ்நாக்காக உண்ணலாம்.

இதில் நார்ச்சத்து அதிகம். மேலும் இலந்தைப்பழம் உடல் எடையைக் குறைக்கவும் உதவும் எனவும் சொல்லப்படுகின்றது.
அதேவேளை இது தொடர்பாக ருஜுதா திவேகர் எனும் மிகவும் பிரபலமான டயட்டீசியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ,
நீங்கள் இந்த சீசனில் இலந்தைப்பழம் சாப்பிடுகிறீர்களா? தவறாமல் சாப்பிடுங்கள். அதில் வைட்டமின் சி அதிகம். ஒரு ஆரஞ்சு பழத்தில் இருப்பதவைவிட இந்த சிறிய பழத்தில் அதிக வைட்டமின் உள்ளது. அடிக்கடி நோய்வாய்ப்படும் நோஞ்சான் குழந்தைகளுக்கு இது நல்லது. #Indiansuperfoods #seasonal என்று பதிவிட்டுள்ளார்.