தமிழர் பகுதியில் குவிந்து கிடக்கும் வளங்கள்; சூறையாட தயாராகும் இந்தியா
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்காக இலங்கையின் பல திட்டங்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்துள்ளார்.
பல மின் உற்பத்தி நிலையங்கள், மன்னார் படுகையில் இரண்டு எண்ணெய் வலயங்கள் ஆகியவைகள் கோரப்பட்டுள்ளன.
இந்தியாவின் சூழ்ச்சி
திருகோணமலை துறைமுகத்தைச் சுற்றியுள்ள காணிகளை கைத்தொழில் அபிவிருத்திக்காக அதானி குழுமத்திற்கு வழங்கமாறு கோரப்பட்டுள்ளது.
இவ்வாறான கோரிக்கைக்கள் மிகவும் ஆபத்தான விடயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னார் படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட கனிமங்களை முறையாக கையாண்டால் இலங்கைக்கு சுமார் 50 வருடங்களுக்கு மேலான எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் கடற்பரப்பில் பொக்கிஷம்
மன்னார் கடற்பரப்பிலுள்ள எண்ணெய் வளம் குறித்து பல நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அதனை உறுதி செய்துள்ளன.
இந்நிலையில் தமிழர்களின் தாயகப் பகுதியான மன்னார் கடற்பரப்பிலுள்ள எண்ணெய் வளங்களை கைப்பற்றும் நோக்கில் அமெரிக்க மற்றும் இந்திய நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.