திருமணத்திற்கு வாங்கிய கடனை அடைக்க வேண்டுமா! அப்போ இந்த பழத்தை தானம் கொடுங்கள்
இப்படி லட்ச லட்சமாக வாங்கிய கடனை கூட சிரமம் இல்லாமல் திருப்பிக் கொடுக்க ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிமையான பரிகாரம் உள்ளது.
பொதுவாகவே எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் கல்யாணம் செய்த வீட்டில் கருப்பு இருக்கும் என்று சொல்லுவார்கள்.
கடன் பிரச்சனை தீர செய்ய வேண்டிய தானம்
அதாவது கல்யாணத்திற்கு நிறைய பணம் செலவு செய்திருப்பார்கள். வீட்டில் பணத்தட்டுப்பாடு இருப்பதை தான் கருப்பு என்ற வார்த்தையை ஒப்பிட்டு காசு பணம் இல்லாத இருள் சூழ்ந்த ஒரு சூழ்நிலை என்று கூட வைத்துக் கொள்ளலாம்.
இந்த கடனை சுலபமாக அடைப்பதற்கு தான் அந்த காலத்திலேயே கல்யாண வீடுகளில் கல்யாணம் முடிந்தவுடன் கல்யாணத்திற்கு வந்தவர்களுக்கு சாத்துக்குடி பழத்தை தானமாக கொடுப்பார்கள்.
தானம்
சில வருடங்கள் பின்னோக்கிப் போனால் ஒரு சுருக்கு பையில் ஒரு சாத்துக்குடி பழம், வெற்றிலை பாக்கு போட்டு கல்யாணத்திற்கு வருபவர்களுக்கு தானமாக கொடுக்கும் வழக்கம் இருந்து வந்தது.
கல்யாணத்திற்கு வாங்கிய கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும் என்றால் சாத்துக்கொடியை தானமாக கொடுக்க வேண்டும் என்ற ஒரு சூட்சமம் உண்டு.
வீடு கிரகப்பிரவேசம்
அத்தோடு வீடு கிரகப்பிரவேசம் மற்ற விசேஷங்களுக்கு கூட வீட்டிற்கு வருபவர்களுக்கு சாத்துக்குடி பழத்தை தானமாக கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
வீட்டு திருமணத்தில் தேங்காய், மட்டை தேங்காய், தாம்பூலம் என்று எதை திருமணத்திற்கு வருபவர்களுக்கு கொடுத்தாலும் அதோடு ஒரு சாத்துக்குடி பழத்தையும் போட்டு கொடுக்க வேண்டும்.
திருமணத்திற்கு மட்டும் தான் இந்த சாத்துக்குடி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. திருமணம் வைத்திருப்பவர்களும் இதை பின்பற்றலாம்.
பிறவி கடன்
பிறவி கடனால் கஷ்டம் இந்த பிறவியில் ஏதேதோ ஆடம்பர செலவுக்காக கடன் வாங்கி கடன் சுமையில் மூழ்கி இருப்பவர்கள் சாத்துக்குடி பழத்தை வாங்கி ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.
உடல் சுகம் இல்லாமல், கையில் பணம் இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்த சாத்துக்குடி பழத்தை தானம் கொடுக்கலாம்.
ஒரு மூட்டை சாத்துக்குடி பழத்தை வாங்கி ஒரு முதியோர் இல்லம், ஒரு ஆசிரமத்திற்கு தானம் கொடுக்கலாம். இந்த சாத்துக்குடி பழம் தானம் பிறவி கடனிலிருந்தும் காப்பாற்றும்.
எலுமிச்சம் பழம்
சாத்துக்குடி பழமும் எலுமிச்சம் பழத்துக்கு இணையானது தான். ஆகவே உங்களுக்கு எந்த கடன் கரைய வேண்டும் என்று வேண்டுதல் வைக்கிறீர்களோ, அந்த வேண்டுதலை மனதில் நினைத்துக் கொண்டே சாத்துக்குடி பழத்தை வாங்குங்கள்.
அந்த வேண்டுதலை நினைத்துக் கொண்டே சாத்துக்குடி பழத்தை தானமாக கொடுங்கள் என்று கூறப்படுகிறது.