யாழில் வைத்தியர் மீது தாக்குதல் ; இளைஞர்களுக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்
யாழ்ப்பாணம் - உரும்பிராய் வீதியில் பயணித்த வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் கைதான நபர்களுக்கு விளக்கமறியல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் உள்ள வீதியால் வைத்தியர் ஒருவர் சென்றுள்ளார் இதன்போது மதுபோதையில் இருந்த ஒரு குழுவினர் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வீதியில் நின்றுள்ளனர்.
தாக்குதல்
அப்போது வைத்தியர் தான் செல்வதற்கு வழிவிடுமாறு கூறியவேளை அவர்மீது அங்கிருந்த கும்பல் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரியவருகிறது.
தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த வைத்தியர் இது குறித்து கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து கோப்பாய் பொலிசார் நேற்றைய தினம் மூவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை வரை அடையாள அணி வகுப்பிற்காக விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.