வீட்டில் பணவரவு அதிகரிக்க வேண்டுமா? இதை மறக்காமல் செய்யுங்கள்
நம்முடைய வீட்டில் குறிப்பிட்ட சில பொருட்களை தேர்ந்தெடுத்து வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றலை ஈர்க்கவும், அதை பெருக்கவும், செல்வத்தை இரட்டிப்பாக்கவும், ஆரோக்கியம் தழைக்கவும், செய்யும் என ஜோதிடத்தில் நம்பப்படுகின்றது.
வீட்டில் பண வரவு அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என இப்பதிவில் பார்ப்போம்.
நிலைவாசல்
வீட்டின் வாயிலில் எப்போதுமே தூய்மையாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். மஞ்சள், குங்குமம் தடவி, தோரணங்கள் கட்டி வைத்திருக்க வேண்டும். தோரணங்கள் கட்டிவிட்டால், அவைகளை வாடிவிடாமலும் பார்த்து கொள்ள வேண்டும். அதேபோல, வாசலில் விநாயகர் சிலை வைக்கலாம்..
மேலும், ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி பூ, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் போன்றவை போட்டு வாசலில் வைக்கலாம்.. ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பு வைப்பதால், எதிர்மறை சக்திகள் வீட்டிற்குள் நுழையாது.
யானை சிலை
வீட்டிற்குள் மணிபிளான்ட், துளசி, கற்றாழை போன்ற செடிகளை வளர்ததாலும், மீன் தொட்டிகளை வைத்திருந்தாலும, சீன பணத் தவளை அல்லது 3 கால் செல்வத்தேரை என்றழைக்கப்படும் சின்னங்களையும் வைப்பதால் கூடுதல் நன்மைகளை பெறலாம். காற்று மணிகளை கட்டிவிடுவதால், இனிமையான சூழலும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும். அதேபோல, வீட்டில் பித்தளை அல்லது வெள்ளை நிறத்தால் ஆன யானை சிலையை வைப்பதாலும் அதிர்ஷ்டமும், நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.
வீட்டிலுள்ள பணப் பெட்டியை அல்லது லாக்கரை வடக்கு திசை நோக்கியோ அல்லது நேர்கிழக்கு திசை நோக்கியோ வைக்கலாம்.. எக்காரணம் கொண்டும் தெற்கு திசை நோக்கி வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், நிதிநிலைமை இன்னும் மோசமாகிவிடும். வட கிழக்கு, தென் கிழக்கு திசையில் பண பெட்டியை வைப்பதையும் தவிர்க்கலாம்.
தென்கிழக்கு மூலை
எப்போதுமே வீட்டின் தென்கிழக்கு மூலையில் நீர் தொடர்பான எந்த பொருளையும் வைக்கக்கூடாது.. அதேபோல, வடகிழக்கு திசை எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும்.. இந்த திசை எந்த அளவுக்கு சுத்தமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு வீட்டில் மகிழ்ச்சியும், நிதிநிலைமையும் சீராக இருக்குமாம்.