நீங்களும் சொந்தமா வீடு கட்ட வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை செய்யுங்கள்
வாடகை வீட்டில் வசிப்பவர்கள் பெரும்பாலும் எப்போது சொந்த வீடு கட்ட போகிறோம்? என்கிற கனவுடன் இருப்பவர்களாக இருக்கிறார்கள்.
தனக்கென சொந்த வீடு அமையாதா? என்று பெரும் லட்சியத்துடன் இருப்பவர்கள் தான் நடுத்தர வர்க்கத்தினர்.
ஜாதக ரீதியாக ஒருவருக்கு இருக்கக்கூடிய தோஷங்களை கூட போக்கி அவருக்கென சொந்த வீடு அமையக்கூடிய பாக்கியத்தை அருளக்கூடிய அற்புதமான சக்தி இவருக்கு உண்டு.
ஆனால் ஒரு சிலருக்கோ சிறு சிறு பரிகாரங்கள் செய்வதன் மூலமே சொந்த வீடு கட்டக்கூடிய யோகம் கை கூடி வருவதாக ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது.
அப்படியான ஒரு எளிய பரிகாரம் பற்றிய குறிப்புதான் இது! பொதுவாக செவ்வாய் பகவான் மற்றும் முருகப்பெருமான் ஆகியோரை தொடர்ந்து வழிபட்டு வந்தால் வீடு கட்டக்கூடிய பாக்கியம் பெறக்கூடும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.
பரிகாரங்கள்
சுகபோக வாழ்க்கையை கொடுக்கக் கூடியவர் சுக்கிர பகவான், சொந்த வீடு யோகத்தை அருளக் கூடியவர் செவ்வாய் பகவான் மற்றும் முருகப்பெருமான்.
செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் ஜாதக தோஷங்கள் நீங்கி சொந்த வீடு கட்டுவதில் ஏற்படக்கூடிய தடைகள் அகலும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இதற்கென பிரத்தியேகமான கோவில்களில் விசேஷமான பரிகாரங்களும் செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட பரிகாரங்களை நம்மால் செய்ய முடியாவிட்டாலும் வீட்டிலேயே எளிமையான முறையில் இப்படி வழிபடலாம்.
சொந்த வீடு கட்டுவது என்ன?
மனை வாங்க கூட என்னால் முடியவில்லை! என்பவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது சீக்கிரமே மனை வாங்கி வீடு கட்டக்கூடிய யோகத்தை பெறுவார்கள்.
ஒவ்வொரு செவ்வாய் கிழமை அன்றும் முருகப்பெருமான் படத்தை வீட்டில் வைத்து அவருக்கு உரிய வாசனை மிகுந்த மலர்களை மாலையாக சூட்டி அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.
அவருடைய வேலுக்கும் இது போல தண்ணீரால் அபிஷேகம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்பு இரண்டு வெள்ளியால் ஆன குத்துவிளக்கு இருந்தால் அதை வைத்து சுத்தமான நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.
பின்னர் புதிதாக ஒரு செங்கலை நீங்கள் காசு கொடுத்து வாங்கி அதை நன்கு கழுவி சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு மலர் வைத்து அலங்கரித்து அதன் மீது இரண்டு அல்லது நான்கு வெற்றிலைகள் வைத்து அகல் விளக்கு ஒன்றை வைக்க வேண்டும்.