கொழும்பு துறைமுகத்திற்குள் சீன கப்பலை அனுமதிக்க வேண்டாம்!
சீனாவின் இரசாயனப் பசளை தாங்கிய கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என மீண்டும் கொழும்புத் துறைமுகத்தினால் குறித்த கப்பல் நிறுவனத்திற்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டிருந்த இரசாயனப்பசளை அடங்கிய கப்பல் அரசாங்கத்தினால் திருப்பியனுப்பிவைக்கப்பட்ட போதிலும் அக் கப்பல் தொடர்ந்தும் தென்னிலங்கை கடற்பரப்பிலேயே தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இதுகுறித்து கொழும்பில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கின்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சரவைத் துணைப் பேச்சாளரான ரமேஷ் பத்திரண, குறித்த கப்பலை நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதிக்க முடியாது என்பதை கொழும்புத்துறைமுகம் குறித்த கப்பல் நிறுவனத்திடம் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.
அதேவேளை கொழும்பிலுள்ள சீனத்தூதுவரை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று இரவு சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றவிடயத்தையும் அமைச்சரவைத் துணைப் பேச்சாளரார் ரமேஷ் பத்திரண உறுதிப்படுத்தினார்.