பிரான்ஸில் அதிக சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடங்கள் எவை தெரியுமா?
பிரான்ஸ் உலகின் புகழ்பெற்ற சுற்றுலா நாடுகளில் ஒன்றாகும். இங்கே பார்வையாளர்களை கவரும் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க, கலாச்சாரமும் இயற்கை அழகும் வாய்ந்த இடங்கள் உள்ளன. பிரான்ஸில் காணப்படும் முக்கியமான 10 சுற்றுலா தலங்களை இங்கு காணலாம்.
ஐஃபில் கோபுரம் (Eiffel Tower)
பிரான்ஸின் அடையாளமாக விளங்கும் இந்த கோபுரம், பாரிஸ் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரம் இரவு நேரத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகவும் அழகாகக் காட்சியளிக்கும்.
லூவ்ர் அருங்காட்சியகம் (Louvre Museum)
உலகின் மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களில் ஒன்றாக லூவ்ர் அருங்காட்சியகம் விளங்குகின்றது. இங்கு உலகப்புகழ்பெற்ற மொனாலிசா போன்ற பல்வேறுபட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
நோத்திர் டேம் தேவாலயம் (Notre-Dame Cathedral)
கோதிக் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த நோத்திர் டேம் தேவாலயம் காணப்படுகின்றது. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இத் தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெர்சை அரச மாளிகை (Palace of Versailles)
பிரஞ்சு அரசர்களின் வாசஸ்தலமாக வெர்சை அரச மாளிகை விளங்கியது. அங்கு காணப்படும் தனித்துவம் வாய்ந்த அழகான தோட்டங்கள், அரங்குகள், கலைப்பொருட்கள் உலகப் பிரசித்தி பெற்றவையாகக் காணப்படுகின்றன.
மொன்ட்-செயின்ட் மிஷெல் (Mont-Saint-Michel)
மொன்ட்-செயின்ட் மிஷெல் எனப்படுவது கடலோரத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு ஆகும். இத் தீவில் உள்ள மலையின் மீது பிரமாண்ட தேவாலயமொன்று காணப்படுகின்றது. அத்துடன் குறித்த தேவாலயத்தைச் சுற்றி கிராமமொன்றும் காணப்படுகின்றது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்தையும் தேவாலயத்தையும் பார்வையிட வருடம் தோரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.