திமுக, அதிமுக வயிற்றில் புளியை கரைத்த விஜய் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் தற்போது கொடிகட்டி பறக்கும் நடிகர்களில் இளையதளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகியோர் உள்ளனர் .
அஜித் மற்றும் விஜய் நடித்துள்ள துணிவு மற்றும் வாரிசு படங்கள் எதிர்வரும் பொங்களை முன்னிட்டு 11 ஆம் திகதி வெளிவரவுள்ளது.
மிக பிரமாண்டமான போஸ்டர்
இந் நிலையில் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் போட்டிபோட்டுக்கொண்டு மிக பிரமாண்டமான போஸ்டர்களை நிறுவி வருகின்றனர்.
இதில் விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய போஸ்டரை ஒட்டி அதில் வருங்கால முதலமைச்சர் எனவும் வாசகங்களை அச்சடித்துள்ளனர்.
அத்துடன் முன்னால் முதலமைச்சர்களின் போட்டோக்களையும் போஸ்டரில் இணைத்துள்ளனர்.
அதில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் 2026 வெற்றிவாகை சூடுக என தெரிவித்துள்ளனர்.
இதனால் இச் செயலானது சும்மாவிருந்த திமுக மற்றும் அதிமுகவினரை விஜய் ரசிகர்கள் சீண்டிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளதாக கூறப்படுகின்றது .