இன்ஸ்டாகிராமில் ஒரே ஒரு பதிவு ;70 கோடி ரூபாய் தீபாவளி பரிசால் ஷாக்கான நபர்
தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகள் அனுப்பி வைக்கமுடியுமா என இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தவருக்கு வீட்டிற்கு வந்த பரிசு பொருட்களால் அதிர்ந்து போயுள்ளார்.
தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவரான வீரமணி, நகைச்சுவையாக பேசி இன்ஸ்டாகிராமில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.
கண்ணீர் மல்க வேண்டுகோள்
இவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு காணொளி பதிவில், தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் தனக்கு இனிப்புகள் அனுப்பி வைக்கமுடியுமா என கேட்டு, தனது வீட்டின் முகவரியையும் அதில் குறிப்பிட்டார்.
இதையடுத்து நெட்டிசன்கள் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை ஓர்டர் செய்துள்ளனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வீரமணி, தான் தவறாக இணையத்தில் கூறிவிட்டதாகவும், தனது வீட்டிற்கு இனிமேல் பொருட்களை ஓர்டர் செய்ய வேண்டாம் எனவும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
இந்தநிலையில் இந்தியாவின் தனியார் நிறுவனமும் அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது.
வீரமணியின் முகவரிக்கு ஒரு கைபேசி, ஒரு கணினி, ஒரு புரொஜெக்டர் மற்றும் பல வீட்டு உபயோக பொருட்களை அந்த தனியார் நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது.
குறித்த தனியார் நிறுவன ஊழியர்கள் தனது வீட்டிற்கு வந்த பொருட்களை இலவசமாக வழங்குவதை மகிழ்ச்சியுடன் இணையத்தில் வீரமணி பகிர்ந்துள்ளார்.