தெய்வீகம் கமழும் Reecha Organic Farm; கோடி புண்ணியம் தேடித் தரும் கும்பாபிஷேகம் !(Video)
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது ஆன்றோர் முதுமொழியாகும். Reecha Organic Farm தமிழர் பகுதியில் மிகம்பீரமாய் தோற்றம் பெற்றுள்ள சுற்றுல்லாத்தலம் ஆகும்.
கிளிநொச்சி - இயக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ள Reecha Organic Farm அதனை சூழவுள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி பலரின் வாழ்வில் விளக்கேறி வைத்துள்ளது என கூறினால் அது மிகையாகாது.
அனைத்து சிறப்புக்களும் ஓர் ஊரில் இருந்தாலும் அங்கு ஆலயம் இருப்பதுதான் அந்த கிராமத்திற்கே பெருமை சேர்க்கும். அதனால் தான் கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என எமது முன்னோர்கள் கூறிவைத்துள்ளனர்.
அந்தவகையில் Reecha Organic Farm இல் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் ஓர் சிறிய காளி அம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமைகளை வழிபாடுகளை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 18 ஆம் திகதி காளி அம்பாளுக்கு கும்பாபிஷேக பெருவிழா நடத்திவைக்கப்பட்டது.