யாழ்ப்பாணத்தில் கொலையில் முடிந்த தகராறு; மட்டக்களப்பு குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் வாளால் வெட்டி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
சுண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள உடப்பு பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு சொந்தமான வாடியில் நேற்று (22) இரவு இரு மீனவர்களுக்கிடையே முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த முறுகல்நிலை முற்றியதில் இருவருக்கும் இடையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்டவர் மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி வடிவேல் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மேலும் ஒருவர் மந்திகை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.