இளம் குடும்பஸ்தரின் உயிரை பறித்த தகராறு ; மனைவியின் அண்ணன் அரங்கேற்றிய சம்பவம்
அனுராதபுரம், இராஜாங்கனை பிரதேசத்தில் ஏற்பட்ட காணித் தகராறு காரணமாக, இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

படுகொலை
உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட காணித் தகராறே இந்த மோதலுக்கும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற படுகொலைக்கும் காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் உயிரிழந்தவரின் மனைவியின் மூத்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான மேற்படி சந்தேகநபர், மோதலின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவரின் மைத்துனர் உயிரிழந்துள்ளார்.